வியாழன், 23 டிசம்பர், 2021

பரிமாணங்களின் தூரம்

ஒரு வட்டத்திற்கு

இரண்டு பரிமாணங்கள்

மூன்றாம் பரிமாணமொன்று வரைய

நீள் வட்டப் பாதையில்

ஒரு கோளம்

ஒரு கோளத்தைச் 

சுற்றுகிறது,


யுகங்களின் தூரத்தில்

கோளம் ஒரு வட்டமாக இருந்தது,

இன்னுமின்னும் யுகங்களின் தூரத்தில்

வட்டம் ஒரு புள்ளியாக இருந்தது.

புள்ளிகளின்றி வேறெதை வியந்திருக்கிறோம்

நிறையிழந்து வெடித்த புள்ளி

வெளியின் ரூபங்களில் எதிரொளிக்க

காண்கின்றன கண்கள்,

அந்தொரு புள்ளி

ஒரு நிலவு,

ஒரு பூமி,

ஒரு நட்சத்திரம்,

வெறும் ஒரு புள்ளி,

இறுதியில்...


***



யாருக்கு தெரியும்

பிரபஞ்சத்தின் முதல் பக்கத்தை,

இரண்டு பக்கங்கள் தள்ளி சொற்கள் 

பேசிக் கொண்டிருந்தன


நிலா, சூரியன்

நட்சத்திரக் கூட்டங்களும்

பூமியைச் சுற்றிவர

நெடுங்காலமாகப் பிரபஞ்சத்தை

ஆமைகள் சுமந்திருந்தன,

நிறை தாங்காத ஆமைகள் சரிந்த நாளில்

சூரியன் ஒரு நட்சத்திரமானது,

நட்சத்திரங்கள் நகரத் தொடங்கின,

பூமியும் சூரியனைச் சுற்றச் சென்றது

எல்லாம் மாறிப் போக

இந்த நிலவு மட்டும்

இன்னும் பூமியையே

சுற்றுகிறது. 

நினைவூட்ட

  காலச்செறிவின்  பாழ்நில வெளியெங்கும்  பிறக்கவிருக்கிறது ஒரு கானகம், மணற் குடுவைகளில் குவியல் குவியலாகச் சரிகின்ற  மணலும் வெளியும் எதிலெதை ந...