காலச்செறிவின்
பாழ்நில வெளியெங்கும்
பிறக்கவிருக்கிறது
ஒரு கானகம்,
மணற் குடுவைகளில்
குவியல் குவியலாகச் சரிகின்ற
மணலும் வெளியும் எதிலெதை நிரப்புகின்றன
பொழுதுகளின் இடைவெளியில்
ஒளியும் இருளும் எதிலெதை தேடுகின்றன
யாவுமிங்கு ஏதோ ஒன்றை நினைவூட்ட
மழை நீரிலில்லை
விழுகின்ற உயரத்தில்
இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக